Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில், அத்தியாவசிய உணவுப் பொருள்களை, கூடுதலான விலைக்கு விற்பனை செய்வோரை இனங்கண்டு, அவர்களுக்கு பொருள் விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ள வாகன அனுமதிபத்திரத்தை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போh கூடத்தில், இன்று(8) அவசரமாக கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது
இதன்போது மேலும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து மொத்த விற்பனை நிலையங்களையும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாகாணத்தின் அனைத்து கிராமங்கள் மற்றும் தோட்டப் பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களுக்கு பற்றாக்குறையின்றி பொருட்களை கொள்வனவு செய்தல், சப்ரகமுவ மாகாணத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களை, மக்களின் தேவைகளுக்காக உடனடியாக திறக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாகாணத்தின் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பருப்பு, செமன் என்பவற்றை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்தல், மாகாணத்தில் வார சந்தைகளை உடனடியாக மூடுதல், உதவி பணம் பெறும் குடும்பங்களுக்கு, 5,000 ரூபாய் விரைவில் பெற்று கொடுத்தல் உட்பட மேலும் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இரத்தினபுரி மாநகர சபை நகரபிதா டிரோன் அத்தநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago