2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பொலித்தீன் பாவனைக்குத் தடை

Kogilavani   / 2017 ஜூலை 03 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

 

ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில், ஹோட்டல்களில் உணவு பரிமாறும் தட்டுகளுக்கு பொலித்தீன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பரிசோதகர் ஆர்.பாஸ்கரன் தெரிவித்தார்.

நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில், நாளொன்றுக்கு 21ஆயிரம் பொலித்தீன்கள், கழிவுகளாக வீசப்படுவதாக தெரிவித்த அவர், இனிவரும் காலங்ளில் நகரில் அரசியல் தொழிற்சங்க நிகழ்வுகளுக்கும் பொலித்தீன் சீட் பாவிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக  கூறினார்.                      

இது தொடர்பில், தொழிற்சங்கங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினா்ர.

தட்டுகளில் பொலித்தீனை பயன்படுத்தாது, தட்டுகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு, ஹொட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“அறிவுறுத்தல்களையும் மீறி, பொலித்தீன்களை பயன்படுத்துவோருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.  நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை  உக்கும் குப்பைகள் உக்காத குப்பைகள் என வகைப்படுத்தி பெறப்படுவதுடன், உக்கும் குப்பைகளை  பசளை தயாரிப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .