2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பொலி​ஸாரை தாக்கியவர் கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டி சந்ரு

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய தலையிட்ட பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா வசந்த கால திடலில்  (22) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாகொல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X