2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

போக்குவரத்து வசதியின்மையால் கல்வியை கைவிட்டுள்ள மாணவர்கள்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட எல்லையில் வசிப்பதன் காரணமாக தாம் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி- வத்துகாமம் புதுக்காட்டுத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பறை தேர்தல் தொகுதியும் ,மாத்தளை மாவட்டத்தில் இரத்தோட்டை தேர்தல் தொகுதியும் பிரியும் எல்லையில் புதுக் காட்டுத் தோட்டம் அமைந்துள்ளது.

கண்டி வத்துகாமம் நகருக்கு சுமார் 13 கிலோ மீற்றர்களும், மாத்தளை வீதிக்கு சுமார் எட்டு கி.மீற்றர்களும் இத்தோட்டத்தில் இருந்து செல்ல வேண்டுள்ளதாக இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத்திற்கு வந்த ஒரே பஸ் வண்டி பாதை குன்றும் குழியுமாக காணப்படுவதால் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.  பஸ் வண்டிதோட்டத்திற்கு  வராததன் காரணமாக பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்வது 75 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டி, மாத்தளை மாவட்டங்களுக்கு இடையில் சிக்கி நாங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் பதிவுகள் வாக்குகள் அனைத்தும் கண்டி மாவட்டத்தில் பாத்தும்பறை தேர்தல்தொகுதிக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பாதையின் பாரிய பகுதி மாத்தளை மாவட்டத்திற்கு சொந்தமாக உள்ளதால் யாரும் இதனை செப்பனிடுவதில்லை என்றும் எல்லை பிரச்சினையின் காரணத்தை முன்வைக்காமல் தோட்டத்திற்கு வரும் பாதையை உடன் சரிசெய்து தருமாரும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்.

எனவே,  வெகு விரைவில் இப் பாதையை செப்பனிட்டு பஸ் வண்டியை மீண்டும் தோட்டத்திற்கு வருவதற்கு வசதிசெய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X