2025 மே 19, திங்கட்கிழமை

போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் இராணுவத்தினர்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

மலையக ரயில் மார்க்கத்தின் நாவலப்பிட்டிய ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா வரை 15 இடங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்துள்ளதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் ரயில் வீதிகளில் விழுந்துள்ள மண்மேடு, கற்களை அகற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மலையக ரயில் போக்குவரத்தை சீர்செய்வதற்கான ஒத்துழைப்பை இராணுவத்தினர் வழங்கி வருவதாக,  நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இங்குருஓயா, கலபொட, ஹட்டன், வட்டவளை, தலவாக்கலை, கிரேட் வெஸ்டன், நானுஓயா ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X