Editorial / 2020 ஒக்டோபர் 02 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி, 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானமையால், 49 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (02) காலை 7 மணியளவில், டயகம- ஹட்டன் பிரதான வீதியில் பணித்துக்கொண்டிருந்த பஸ், போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் வைத்தே, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த 49 பேரில், ஒருவர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் மற்றையவர்கள், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில், பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது.







7 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025