Freelancer / 2023 மார்ச் 08 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெதின் போயா தினமான திங்கட்கிழமை (06) பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு வருகை தந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிவனொளிபாத மலைக்கு வருகை தந்த வாகனங்களை சோதனைக்கு உட்படுத்திய போதே போதைப் பொருட்களுடன் பயணித்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 33 பேரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், அவர்கள் அனைவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026