R.Maheshwary / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன், நீலமேகம் பிரசாந்த்
ஆசிரியர்- அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் பலர், சமூகவலைதளங்களில் கொச்சைப்படுத்தும் வகையில், விமர்சனம் செய்வதாகவும் இவ்வாறு அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரவணமுத்து பாலசேகரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
24 வருடங்களுக்கு மேலான எமது உரிமையை தற்போது 52 நாட்களாக போராடி கொண்டிருக்கின்றோம். ஆசிரியர்கள் என்போர் அரசாங்க உத்தியோகத்தர்கள். எனவே, எமது பிரச்சனைகளையோ அல்லது உரிமைகளையோ அரசாங்கத்திடமே கேட்டு பெறவேண்டும். அதனாலேயே அரசாங்கத்திடம் கேட்டு போராடி வருகின்றோம்.
எனவே, எமது அறவழி போராட்டத்தை சமூக ஊடகங்களில் கொச்சைப்படுத்தி மக்களை திசைத்திருப்ப முயற்சிப்பவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்து, அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சங்கப் போராட்டம் நியாயமானது என பல தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார்.
31 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
4 hours ago