2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

போஷாக்கின்மையை ஆராய விசேட குழு

Freelancer   / 2023 மார்ச் 26 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில்  போஷாக்கின்மை அதிகரிப்பை ஆராய பாராளுமன்றத்தில்  வடிவேல் சுரேஷ் எம்.பி தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின்  விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக  இலங்கையில் பாதி குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளுக்கான முறையான உணவு  வழங்குதலை  குறைத்துள்ளதாகவும் பத்துக்கு  ஒன்பது குடும்பங்கள் தங்களுடைய குழந்தைக்கு போஷாக்கான  உணவுகளை வழங்க முடியாமல் இருப்பதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 இலங்கையில் சிறுவர்களுக்கான உணவு போஷாக்கு தன்மை குறைந்துள்ளதா என ஆராய்வதற்கும்  அவ்வாறாயின் அது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய குறுகிய கால நடுத்தர கால நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும்  வடிவேல் சுரேஷ்  தலைமையில் பாராளுமன்ற குழு  நியமிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X