2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பௌசர்-கார் விபத்து: ஐவர் படுகாயம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கிஷாந்தன்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள - பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா- கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள - பத்தனை சந்தியில் வைத்தே சனிக்கிழமை (12) இரவு 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வெலிமடையிலிருந்து கொட்டகலை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தேயிலை களஞ்சியசாலை வளாகத்துக்கு பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் பௌசரும், நோர்வூட்டிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காருமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

 

கார் வேகமாக செலுத்தப்பட்டுள்ளது எனவும், அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஐவரும் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 20 -30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் திம்புள்ள - பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X