Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 19 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவ, மாணவிகளையும் தோட்டத்தில் வேலை செய்யும்படி தோட்ட நிர்வாகம் உத்தரவிட்டமை, தோட்ட முகாமையாளரை அகற்றல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பதுளை, கல்லுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பான பேச்சுவார்ததை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தோட்ட முகாமையாளரை அகற்றல் மற்றும் 12 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, மடூல்சீமை பிளான்டேசன் பொறுப்பில் இயங்கும் கல்லுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 500 பேர், கடந்த 17ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவ மாணவிகளையும் தோட்டத்தில் வேலை வேலை செய்யும்படி தோட்ட நிர்வாகம் உத்தரவிட்டதனை கண்டித்தும் இப்பணிப் பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை, பதுளை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் தொழில் அதிகாரி ஆர். எம். குமாரிஹாமி தலைமையில், நேற்று (19) நடைபெற்றது. இப்பேச்சு வார்த்தையே இணக்கப்பாடின்றி தோல்வியில் முடிவுற்றதாகும்.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில், தோட்ட தொழிலாளர்கள் தரப்பில் மலையக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட பிரதிநிதி எம். கணேசமூர்த்தி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க சார்பில் எஸ். சதாசிவம், இலங்கை தொழிலாளர் சமூக சங்க சார்பில் எஸ். குணாளன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எஸ். நடராஜ் ஆகியோரும் தோட்ட நிர்வாக சார்பில் ஏ.பி.பி. ஹேவாவசம், திலிப் ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாமல், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்த பேச்சுவார்த்தையில் மடூல்சீமை பிளாண்டேசன் முகாமைத்துவ பணிப்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்றும், அதன் மூலமே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் எடுத்துரைத்துவிட்டு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினர்.
பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவு கிடைக்கும்வரை தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நீடிக்குமென்றும் தொழிலாளர்கள் தரப்பு தெரிவித்திருந்தது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago