Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
'பாடசாலை அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கியுள்ள, ஆளனி மற்றும் உட்கட்டமைப்புக்கள் குறைவாக உள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைக்கு அமைய நாட்டில் காணப்படும் அனைத்து பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அந்த வகையில் தென் மாகாணத்தில் காணப்படும் 35 முஸ்லிம் பாடசாலைகளும் பெருந்தோட்டங்களில் காணப்படும் 10 தோட்ட பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,
'தென் மாகாணத்தில் வசித்துவரும் தமிழ் மாணவர்கள், சகோதர மொழியில் தமது கற்றலை தொடர்வதால் இவர்கள் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மறந்து வருகின்றனர். இதனை நான் தவறு என கூறவில்லை. இது நாட்டின் இன ஒற்றுமையை காட்டுகின்றது. ஆனாலும், நாம் பேசும் தமிழ்மொழியை வளர்க்க வேண்டும். அதற்கு கல்வித்துறை வளர்ச்சி அடைய வேண்டும்.
அந்தவகைளில் தென் மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான 45 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. 2016 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் கல்விக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் முழு நேர பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் தொடர்ந்து வரும் 5 ஆண்டுகால பகுதியில் கல்வியில் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago