2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாதுகாப்பு வேலி வேண்டும்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்

தலவாக்கலை, ஸ்டேசன் வட்டகொடை தோட்டத்தில் சுமார் 1 ½ ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 20அடி ஆழம் கொண்ட இரு குளங்களையும் சுற்றி பாதுகாப்பு வேலியை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

100 வருடம் பழமை வாய்ந்த இவ்விரு குளங்களில் ஒன்று, தேயிலை கன்றுகளுக்கு நீரை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் மற்றொன்று அம்மன் ஆலயத்துக்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குளங்கள் எவ்வித பாதுகாப்பும் அற்ற நிலையில் காணப்படுவதால் இக்குளங்களில் தவறி விழுந்து  இதுவரை 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.  

இவ்விரு குளங்களுக்கும் பாதுகாப்பு வேலிகளை அமைத்து தருமாறு கோரி அமைச்சர்கள், பிரதேச மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .