Sudharshini / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
மலையக மக்களின் நலன்கருதி உருவாக்கப்பட்ட பிரஜாசக்தி நிலையங்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டகொடை தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரஜாசக்தி நிலையத்தில், மின்னிணைப்பு இன்மையால் இந்நிலையத்தில் கணினி கல்வியை கற்றுவந்த இப்பகுதி மாணவர்கள் பாடநெறியை இடைநிறுத்தியுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வட்டகொடை தோட்டத்தில் 2008ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்நிலையத்தின் ஊடாக, பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இப்பொழுது அனைத்து திட்டங்களும் செயலிழந்துள்ளன.
பிரஜா சக்தி நிலையத்தினால் கணினி கல்வி, தையல் பயிற்சிகள், தலைமைத்துவப் பயிற்சி என பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும் தற்போது அவை இடைநிறுத்தப்பட் டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 43 நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 300க்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்கள் சேவையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களுல் வெளிக்கள இணைப்பாளர்கள், நிலைய இணைப்பாளர்கள், தற்காலிக உத்தியோகஸ்தர்கள் என பலர் கடமையாற்றி வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் மாதாந்த ஊழியம் வழங்காததால் அவர்கள் பொருளதார ரீதியில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர்.
இவ் ஊழியர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக எவ்வித கொடுப்பணவும் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026