Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. இராமசந்திரன்
சௌமிய மூர்த்தி தொண்டமான் என்ற தலைவர் உருவானபோதுதான் எமது சிறுபான்மை சமூகம் தலைநிமிர்ந்து வாழத் தொடங்கியது. அவ்வாறான ஒரு மாற்றம் பேரம் பேசம் சக்தியை ஏற்;படுத்தியது. எனினும் அவ்வாறான ஒரு நிலை இன்று இல்லாமல் போய்விட்டது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
எமது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கும் இதுவரையிலும் தீர்வு எட்டப்படவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 35 வருடகாலமாக நியாயமான சம்பளத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்து வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினாலும் மண்சரிவினாலும் தமது உடமைகளை இழந்துள்ள இவ்வேளையில் நரகாசூரனை அழித்து தீபாவளி பண்டிகை என்ற ஒன்று அன்று உருவானது போல இத்திருநாளில் எமது மக்களின் பல்வேறு துன்பங்கள் நீங்கி ஒளிமயமான எதிர்காலங்கள் உருவாக எல்லா வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீப திருநாளில் உளம் நிறைந்த வாழ்த்துக்களை எமது பெருந்தோட்ட மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களும் சேர்ந்து இந்நாட்டிலே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ஆனால் எமது சிறுபான்மை மக்களின் இன்னும் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்பட்டு வருகின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறான அரசியல் மாற்றங்கள் உருவாகினாலும் எமது சிறுபான்மை மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். வடக்கில் அரசியல் மாற்றங்கள் உருவாகினாலும் அங்குள்ளவர்கள் இன்னும் காணாமல் போனோரை தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அங்கும் இதுவரையிலும் ஒரு சுமூகமான நிலை உருவாகவில்லை. எமது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கும் இதுவரையிலும் தீர்வு எட்டப்படவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 35 வருடகாலமாக நியாயமான சம்பளத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்து வந்துள்ளது.
சிறுபான்மை மக்கள் 41 வருட காலமாக அரசியல் அநாதைகளாக வாழ்ந்துள்ளார்கள். சௌமிய மூர்த்தி தொண்டமான் என்ற தலைவர் உருவானபோதுதான் எமது சிறுபான்மை சமூகம் தலைநிமிர்ந்து வாழத் தொடங்கியது. 1977ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் கல்வி, சமூக, பொருளாதார ரீதியில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் உருவானது. அவ்வாறான ஒரு மாற்றம் பேரம் பேசம் சக்தியை ஏற்ப்படுத்தியது. அவ்வாறான ஒரு நிலை இன்று இல்லாமல் போய்விட்டது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறமுடியாமல் இருக்கின்றது. காரணம் எமது மத்தியில் பேரம் பேசும் சக்தி இல்லாமல் போய்விட்டது. இலங்கை அரசியலில் என்றுமே இல்லாதவாறு தேசிய அரசாங்கம் அமைய பெற்றுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் நாம் சிறந்த ஆட்சியை உருவாக்கி பேரம் பேசும் சக்தியை உருவாக்க வேண்டும். மேலும் நிரந்தரமான சம்பள உயர்வையும் எமது பெருந்தோட்ட மக்கள் பெற வேண்டும். எனவே, எமது மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
2 hours ago