2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாராபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும்

Princiya Dixci   / 2015 நவம்பர் 03 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.செல்வராஜா 

நியாயம் கோரி போராட்டத்தை மேற்கொண்ட எச்.என்.டி.ஏ. மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டமை வருந்தத்தக்கது என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கொழும்பு, வோட்டன் பிளேசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறிக்கான மாணவர்கள், நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்தே தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்கது.  அவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல் மனித நேயத்துடன் செயற்;பட்டு நிலைமையை அனுகியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும். அதைவிடுத்து, வன்முறையினால் பிரச்சினை பூதாகரமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதுடன், இதனால் பொலிஸ் திணைக்களமே தலைகுனிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்கால வளர்ச்;சிக்கு முதுகெலும்பாக செயற்படக்கூடிய மாணவர்களின் மீது, பொலிஸார் கட்டவிழ்த்துவிட்ட இந்த வன்முறையனது ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாகும். இனிமேல் இது இடம்பெறாது பாதுகாக்க வேண்டும்.

இத்தாக்குதல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் கூறியாக வேண்டும்.  மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடைபெற்று குற்றமிழைத்தவர்களுக்கு பாராபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .