Sudharshini / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
வட்டவளை லொனன் தோட்டத்தின் பாற்பண்ணை முகாமையாளரை வெளியேற்றுமாறு கோரி 50 தொழிலாளர்கள் நேற்று(15) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மேற்படி, பாற்பண்ணையில் தொழில் புரிந்து வரும் இரு தொழிலாளர்கள், வழமைப்போன்று திங்கட்கிழமை (14) தொழிலுக்குச் சென்ற போது, அவ்விருவரையும் பண்ணையின் முகாமையாளர் தொழிலுக்கு வரவேண்டாமென கூறியுள்ளதுடன் அவர்களை வெளியில் தள்ளி வாயிற்கதவையும் அடைத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேற்படி முகாமையாளரை வெளியேற்றுமாறும் கோரியே தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
பண்ணையின் முகாமையாளர், வழமையாக தொழிலாளர்களிடம் இவ்வாறு நடந்துகொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேற்படி இரு தொழிலாளர்களும் தொழிலுக்கு போதையில் வந்ததுடன் நேரம் தாமதித்து வந்ததாக, முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025