Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத் தாள்களுடன் இராணுவ சிப்பாய்கள் இருவரை, எல்ல பொலிஸார் சனிக்கிழமை (31) மாலை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
எல்ல பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, இராணுவ சிப்பாய் ஒருவர் ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத் தாள்கள் இரண்டுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து தியத்தலாவை இராணுவ முகாமில் கடமையிலிருந்த மற்றொரு இராணுவ சிப்பாயும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து தியத்தலாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
53 minute ago