2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மகளிர் தினத்தை ஹட்டனில் நடத்த ஏற்பாடு

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தினத்தை இந்த வருடம் ஹட்டனில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று முன்தினம் (5) ஹட்டனில் நடைபெற்றது.

 இதன்போது கருத்து தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், 

தொழிலாளர் தேசிய சங்கம் மே தினம் ,மகளிர் தினம் போன்ற தினங்கள் குறித்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதுடன், அண்மையில் பொங்கல் விழாவை மிகச்சிறப்பாக நடத்தியது.

அந்த வகையில் இவ்வருடத்துக்கான மகளிர் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி ஹட்டனில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணிக்கு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தொழிலாளர் தேசிய சங்கம் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு சங்கமாகும்.

இந்தச் சங்கம் தனது தலைமையில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகின்றது.

சங்கத்தின் கட்டுக்கோப்பை மீறி யாராவது செயற்படுவார்களானால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .