2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மகள், தந்தையின் விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

Editorial   / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத தந்தை தன்னுயிரையும் மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. யுவதி ஒருவர் தன்னுயிரை‌ 19 ஆம் திகதி மாய்த்துக்கொண்டார். துயரம் தாளாத தந்தை கழுத்தை அறுத்துக்கொண்டார்.‌ முதலாவது முயற்சி தோல்வி அடையவே மறுபடியும் முயன்றுள்ளார் அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. இவர் தற்பொழுது கண்டி மாவட்ட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 17 வயதான யுவதியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது . இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்விலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X