2026 மே 09, சனிக்கிழமை

dd

மகா கும்பாபிஷேகம்

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா - இராகலை நகரிலுள்ள அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக பெருவிழா, எதிர்வரும் வெள்ளிக்கிழமை(7) காலை இடம்பெற உள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை (1) காலை பூஜைகள் ஆரம்மாகவுள்ளன.

எதிர்வரும் 4ஆம் திகதி விசேட பூசைகள் இடம்பெறவுள்ளதுடன் 05ஆம் திகதி காலை  விசேட யாக பூஜையுடன் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது..

அதனைத் தொடர்ந்து, வெளளிக்கிழமை(7) அதிகாலை 5.30 மணியளவில், விசேட பூசைகளுடன் காலை 7.30 மணிக்கு இராகலை நடுக்கணக்கு கருணா கங்கையிலிருந்து புனித கங்கை நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படவுள்ளது. 48 நாள்களுக்கு மண்டலாபிஷேக பூசைகள் நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .