Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ கொரோனா வைரஸ் பரவலை உரிய வகையில் கட்டுப்படுத்தி, நாட்டு மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் தவறியுள்ளதென தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், சுகாதார தரப்புகளால் விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாகவும் செயற்பட்டுவருகின்றது என்றார்.
நாட்டு மக்கள் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, பொருளாதாரம்தான் முக்கியம் என்ற
மனநிலையில் இருக்கும் ஆட்சியாளர்களை இனியும் நம்பமுடியாது. எனவே. நாட்டு மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக சுய முடக்கத்துக்கு தயாராக வேண்டும் என்றார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்து. இன்று ‘பாதுகாப்பு’ என்பது எல்லா விதத்திலுமே கேள்விக்குறியாகியுள்ளது. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன், உயிருக்குகூட உத்தரவாதமில்லாத பயங்கர
நிலைமை உருவாகியுள்ளது.
போரை முடித்த எங்களுக்கு கொரோனா சிறுவிடயம் என மார்தட்டியவர்கள், இன்று விழிபிதுங்கி நிற்கின்றனர். தற்போதைய சூழ்நிலைக்கு அரசாங்கமே முழுமையாக பொறுப்புக்கூறவேண்டும். கொரோனா மரணங்களை படுகொலைகளாகவே கருத வேண்டியுள்ளது.
மக்கள் வீதிகளிலும், வீடுகளிலும் செத்து மடியும் நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலையிலும் உயிர் குறித்து சிந்திக்காமல், பொருளாதாரம் பற்றியே அரசாங்கம் கதைக்கின்றது. பொருளாதாரத்தைவிடவும் உயிர் மேலானது என்பது அவர்களுக்கு புரியவில்லை. இதயமற்ற, இரக்கமற்ற இந்த அரசுக்கு மக்களின் வலி, வேதனை எங்கு புரியப்போகின்றது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026