2025 மே 12, திங்கட்கிழமை

‘மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதிய அரசமைப்புக்கு ஆதரவு’

Gavitha   / 2020 நவம்பர் 01 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய அரசமைப்பு ஒன்று கொண்டு வரப்பட்டால், அதற்கு ஆதரவு வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் என, கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

 கண்டியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  நாட்டில் தற்போது சுகாதார பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை என பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இவை அனைத்துக்கும் தீர்வாக ஒரு புதிய அரசமைப்பு கெர்ணடுவரப்பட்டு, தங்களது கருத்துகளும் உள்வாங்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவதாக அவர் கூறினார்.

தாங்கள், முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போதும், ஜனநாயகத்தை வலுப்படுத்த முயன்றதாகவும் அதற்காகவே, 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறினார்.

19ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்hமல், தனி நபர் ஆதிகத்தை வலுப்படுத்தும் தனி நபர் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.

'ஒரு கூட்டணி என்ற அடிப்படையில், பல கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட்டாலும,; எமக்குள் கூட்டுப் பொறுப்பு என்று ஒன்று உண்டு. எம்முடன் போட்டியிட்டு வெற்றிn பற்ற சில அங்கத்தவர்கள், 20 ஐ ஆதரித்தமை கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும். கட்சித்தலைவர்களால்,தமது உறுப்பினர்கiளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது எமக்குள்ள ஒரு பாரிய புதிராகும' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X