Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஸ்ரீ சண்முகநாதன்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமது வேட்பாளர்கள் தெரிவாவதற்குக் காரணமாகவிருந்த வாக்காளர்களின் நலன் கருதி, எதிர்காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, வாக்களித்த மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில், தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேச சபைகளில், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு, 18,011 வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து 8 உறுப்பினர்களை வெற்றிகொள்வதற்கு வழிவகுத்த தமது ஆதரவு வாக்காளர்களுக்கு, நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறிய மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், நோர்வூட் பிரதேச சபைத் தேர்தலில், பொகவந்தலாவை வட்டாரத்தை மாத்திரம் வெற்றிகொண்ட போதும், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனரென்றும் கூறினார்.
பொய்ப்பிரசாரங்கள், கையூட்டல்கள், நம்பிக்கை துரோகங்கள் போன்றன இடம்பெற்றன எனக் குறிப்பிட்ட அவர், அவற்றுக்கு மத்தியில், தமது வாக்காளர்கள், கடந்த இரண்டு வருடங்களாக தமது தலைமைகளின் சேவையைக் கருத்திற்கொண்டு, கணிசமான வாக்குகளை வழங்கினர் எனக் கூறிய அவர், இந்த வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, தமது தலைவர்களான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணி முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், தோட்டக்கமிட்டித் தலைவர்கள் உட்பட பலர் அயராது பாடுபட்டனர் எனவும் நன்றிபாராட்டினார்.
நோர்வூட் பிரதேச சபைக்குக் கிடைத்துள்ள ஏழு போனஸ் உறுப்பினர்களைக் கொண்டு, எதிர்காலத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago