R.Maheshwary / 2022 ஜூன் 12 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
ஹட்டன்- மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (11) மண்ணெண்ணெய்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடனேயே வீடு திரும்பினர்.
அதிகாலை நான்கு மணி முதல் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக, நீண்ட வரிசையில் நின்ற மக்களிடம், பொலிஸார் மண்ணெண்ணெய் இன்று விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவித்ததனையடுத்து பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இதுகுறித்த மண்ணெண்ணெய் விநியோக முகவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, மண்ணெண்ணெய் எப்போது வரும் என்று எங்களுக்கு முன்கூட்டி அறிவிப்பதில்லை. வரும் பொழுதான் எங்களுக்கு அறிவிக்கிறார்கள். அதனால் எங்களுக்கு உரிய நாளில் வாருங்கள் என்று மக்களுக்கு தெரிவிக்க முடியாது என்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago