Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்
மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு, 3 கியூப் மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று, விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து, நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குருக்குப்பாதையில், நேற்று (04) இரவு 11 மணியளவில் இடம்பெற்றதென, நானுஓயா போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் வேகத்தை லொறிச் சாரதி கட்டுப்படுத்த முயன்றபோது, கட்டுப்பாட்டுக்கு அப்பால், வீதியை விட்டு விலகி, மண்மேடில் லொறி மோதி, விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளாரெனவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துக் குறித்து மேலதிக விசாரணைகளை, நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
26 minute ago
29 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
29 minute ago
31 minute ago