2025 மே 05, திங்கட்கிழமை

மண்சரிவால் பாதிக்கப்பட்ட தோட்டங்களுக்கு வடிவேல் விஜயம்

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் அலகொல்ல லகிலேண்ட் ,கம்பாஹா கேகீல்ஸ் மண்சரிவால் பாதிக்கப்பட்ட ஹப்புத்தளை, தங்கமலை, கெல்பன் ,பத்கொட தோட்டங்களுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கையளித்துள்ளதோடு நிறை குறைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தற்காலிக குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை அமைப்பதற்க்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதோடு

பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X