2025 மே 19, திங்கட்கிழமை

மண்சரிவு அபாயத்தில் வட்டவளை பாடசாலை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

வட்டவளை பாடசாலையின் பிரதான வீதிக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணத்தினால் குறித்த பாடசாலையின் கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு குறித்த பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கு அருகில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் பிரதான வீதிக்கு அருகில் ஏற்கனவே ஒருமுறை மண்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில்,  அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக குறித்த பாடசாலையின் கட்டடத்திற்கு அருகில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அண்மையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட மண்பரிசோதனையில் குறித்த பாடசாலை மண்சரிவுக்கு உட்படும் அபாயகரமான பகுதியாக அறிவித்திருக்கின்றது.

பாடசாலையின் பிரதான வீதிக்கு அருகில் மண்சரியும் பகுதியில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அனுமதியும் வழங்கியிருந்தது.அதுவும் தற்போது காலம் கடந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X