2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மண்மோட்டில் மோதி ஓட்டோ விபத்து

Editorial   / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்தில் இருந்த மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயமடைந்து டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் நோர்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் வனராஜா தோட்டத்திற்கு அருகில்  டிக்கோயாவிலிருந்து காஸ்ட்லரி, கார்பெக்ஸ் தோட்டம் வரை  செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதுடன், விபத்தில்   சாரதி காயமடைந்துள்ளார்.

விபத்தில் முச்சக்கரவண்டி பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X