2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பிப்பு

Sudharshini   / 2016 ஜூன் 07 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு, வங்கியில் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்து அதில் ஒரு தொகையை வைப்பீடு செய்து உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.

இதேவேளை,  புளத்கோஹுப்பிட்டிய, களுபஹன, தெஹியோவிட்ட, டென்ஸ்வத்த ஆகிய பகுதிகளில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு  வியாழக்கிழமை(9) நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவுள்ளதாக இ.தொ.கா. மேலும் கூறியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பங்களிப்புடன் இப்பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக இ.தொ.கா.வின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், இ.தொ.கா உப தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான எஸ்.அருள்சாமி, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான வதிவிடப் பிரதிநிதி டொங்லி, சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .