Gavitha / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறுவனொருவன், இன்று புதன்கிழமை (16) மாலை உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியில் தரம் 5இல் கல்வி பயிலும் 10 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவர் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில்;
மண்மேடுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாகவும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் சுயநினைவை இழந்து விட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(படப்பிடிப்பு: கதிரவேலு துரைரட்ணம்)

55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago