2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாணத்தில் 1,000 ஐ அண்மித்த தொற்றாளர்கள்

Kogilavani   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐ அண்மித்துவிட்டதாக, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில், மத்திய மாகாணத்தில் 52 தொற்றாளர்கள் புதிதாக பதிவாகி உள்ளதுடன் அவர்களில் நுவரெலியா மாவட்டத்தில் 36 பேரும் கண்டி மாவட்டத்தில் 16 பேரும் பதிவாகி உள்ளனர் என்று  சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மத்திய மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 968 ஆக உயர்வடைந்துள்ளது.  

இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில், 589 தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 304  தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில்  75  தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X