2025 மே 12, திங்கட்கிழமை

மத்திய மாகாணத்தில் 106 தொற்றாளர்கள்

Kogilavani   / 2020 நவம்பர் 01 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரத்ன

மத்திய மாகாணத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 106 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மய்யங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில் 33 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 48 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 25 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றுத் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X