2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா

Yuganthini   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.கேதீஸ்

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7,8 ஆம் திகதிகளில், நுவரெலியா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மத்திய மாகாண கல்வி, விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரனின்  ஆலோசனைக்கமைய,  மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு, சாகித்திய விழாவை ஒழுங்கு செய்துள்ளது.

சாகித்திய விழாவின் முதல் நாள் நிகழ்வாக, மலையகக் கலை, கலாசார, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், பண்பாட்டு ஊர்வலம் நடைபெறவுள்ளது. இந்த ஊர்வலம், நுவரெலியா நகர் கார்கில்ஸூக்கு அருகில் ஆரம்பமாகி,  நகரசபை மண்டபம் வரை சென்றடையவுள்ளது.

நிகழ்வில் பெருவாரியான பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், இரண்டாம் நாள் நிகழ்வுகளாக மலையக பெருந்தோட்ட மக்களின் கலை நிகழ்வுகள், சாகித்திய விழா மலர் வெளியீடு, சொற்பொழிவுகள், சாகித்திய விருது வழங்கல் மற்றும் கௌரவிப்புகள்  என்பன இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .