Sudharshini / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண சபையின் புதிய தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் எல்.நிமலஸ்ரீ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சபையின்; மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, சபையின் புதிய தலைமைப் பதவிக்கு, மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களான எல்.நிமலஸ்ரீP, மதியுக ராஜா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 50 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இவ்வாக்கெடுப்பில், 25 வாக்குகளை எல்.நிமலஸ்ரீயும் 22 வாக்குகளை மதியுகராஜாவும் பெற்றனர்.
3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 25 வாக்குகளைப் பெற்ற எல்.நிமலஸ்ரீ, மத்திய மாகாண சபையின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்;. மேலும், மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கியக தேசியக் கட்சியைச் சேர்ந்த திருமதி. ரேணுகா ஹேரத்தும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜானக அயிலபெருமவும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக சிறிசேனவும் தெரிவு செய்யப்பட்டனர்.
47 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
1 hours ago