Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 02 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஷ்
'தீபாவளிப் பண்டிகையை மதுவின்றி கொண்டாடுவோம்' என்ற தொனிப்பொருளில் பிரிடோ நிறுவனத்தினால் ஒன்பதாவது முறையாகவும் 'மதுவில்லா மலையகம் நோக்கிய அருள்யாத்திரை' முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரிடோ நிறுவனத்தின் வெளிக்கள இணைப்பாளர் சந்திரசேகரன், 'தீபாவளிப் பண்டிகையின் புனிதத்துவத்தை மதுவினால் மாசுபடுத்த வேண்டாம். மது அருந்தி, குடும்பத்திலும் சமூகத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்தாது மகிழ்சியுடன் தீபாவளியை கொண்டாட உதவுங்கள்' என்றார்.
'ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் சூழலில் தீபாவளி முற்பணம் என்ற பெயரில் வாங்கப்படும் கடன் பணத்தை மதுபான கடைகளுக்கு வாரியிறைக்க வேண்டாம். மதுவுக்காக செலவிடும் பணத்தை பிள்ளைகளின் கல்விக்காகவும் குடும்ப மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துங்கள் என்ற செய்திகளுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த பரிந்துரை கடந்த வருடங்களில் நல்ல பயனை தந்துள்ளது' என்றும் அவர் கூறினார்.
'நமது வருமானத்தை திட்டமிட்டு செலவிட்டு பொருட்கள் வாங்க வேண்டும். பேராசையை கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டோமேயானால் கடனின்றி வாழலாம். வெளிநாட்டில் வேலை செய்வோர்; பல்வேறு சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் உழைத்து அனுப்பும் பணத்தை சிலர்; மதுபானத்துக்கு செலவிடுகிறார்கள்.
கடந்த முறை தீபாவளி முற்பணம் என்பது உங்கள் உழைப்பை ஈடு வைத்து பெறப்பட்ட கடன் என்ற கருத்தை பிரிடோ வலியுறுத்தியதன் காரணமாக, சில தொழிலாளார்கள் தோட்ட நிர்வாகத்தின் துணையுடன் மாதா மாதம் ஒரு தொகையை சேமித்து தீபாவளி முற்பணத்துக்கு பதிலாக தாங்கள் சேமித்த பணத்தைப் பெற்று கடனின்றி தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதுடன் தீபாவளி முற்பணம் தங்களுக்கு தேவையில்லை என்று கூறும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் முயற்சி செய்து திட்டமிட்டு செலவிடும் பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால், வாழ்க்கையோடு ஊறிப்போய்விட்ட கடன் கலாசாரத்தில் இருந்து விடுபட முடியும்' என்றார்.
'தீபாவளி பரிந்துரையை முன்கூட்டியே ஆரம்பித்து, முடியுமானவரை தீபாவளியின் போது மதுபாவனையை குறைக்க பிரிடோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த பரிந்துரை அதிக வெற்றியை கொண்டு வரும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்படுத்தியுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
6 hours ago