2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

மனிதச் செயற்பாடுகளால் பசுமை இழக்கும் சிங்கராஜ வனம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.பாயிஸ்

தேவையற்ற மனிதச் செயற்பாடுகள் காரணமாக, உலக மரபுரிமையில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனத்தால் பெயரிடப்பட்டிருக்கும் சிங்கராஜா வனம் அழிவடைந்து வருவதாக சுற்றுச்சூழலியலாளர்களும் பிரதேச மக்களும் தெரிவிக்கின்றனர்.

சிங்கராஜ வனப்பகுதியில், 1978ஆம் ஆண்டு கட்டாய கமத்தொழில் சட்டத்துக்கு இனங்க  வழங்கப்பட்ட  21ஃ2 ஏக்கர் காணியில் விவாசயத்தை மேற்கொண்டு வருபவர்கள், தங்களது விவசாய நிலங்களை விஸ்தரிப்பதற்காக, சிங்கராஜ வனத்தை சூறையாடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்துடன் சிங்கராஜ வனத்திலுள்ள மூலிகை மரங்கள், பெறுமதிமிக்க மரங்களை வெட்டி வியாபாரம் செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானச் செயற்பாடுகளால், சிங்கராஜ வனத்தின் பாந்து ராஎல எனும் பிரதான நீரூற்றிலிருந்து விரிந்துச் செல்லும் பசுமையான சிற்றாறுகளும் மகுருகந்த ரேனகந்த வனங்களும் தற்போது பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வனத்தில் சமூக விரோதச் செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்ற போதிலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அதனைக் கவனத்திற்கொள்ளத் தவறியுள்ளனர் என்றும் சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே சிங்கராஜ வனத்தின் பெருமையைக் கட்டிக்காப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X