Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதிக்கு கடந்த 2006ஆம் ஆண்டு சென்ற தனது மனைவி, இதுவரை நாடு திரும்பவில்லை என்றும் அவரை இலங்கைக்கு மீண்டும் அழைத்துவருவதற்கு உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இறக்குவாணை, தெமுவாத்த சின்ன கலட்டாவத்தையைச் சேர்ந்த நபரொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி நபரின் மனைவியான நிர்மலா பெரியசாமி என்பவர் வறுமை காரணமாக கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி, சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
'இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொழும்பு, மருதானையிலுள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்துக்கூடாக சவூதிக்குச் சென்ற இவர், 2008ஆம் ஆண்டு இறுதியில் நாடு திரும்புவதாக, அங்கிருந்து அலைபேசி ஊடாக அறிவித்தார்.
எனினும், அதற்குப் பிறகு நிர்மலாவிடமிருந்து எவ்வித அழைப்புகளும் கிடைக்கப்பெறவில்லை. நிர்மலா பணிப்புரிந்த வீட்டுக்கு, 2013ஆம் ஆண்டு அழைப்பை ஏற்படுத்தி விசாரித்த போது, அவர் வேறு வீட்டுக்கு மாறிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த எண்ணுக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்தியபோதும், அந்த எண்ணுடன் தொடர்புகொள்ள முடியாமல் போனது.
இவ்விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பலமுறை முறையிட்டபோதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நான், ஊனமுற்ற நிலையில் கஷ்டப்பட்டு வருகின்றேன். பிள்ளைகளும் கஷ்டப்படுகின்றனர். எனது மனைவியை நாட்டுக்கு விரைவில் அழைத்துவர உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோருகிறேன்' என அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 minute ago
11 minute ago