2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டது

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இந்திக அருணகுமார

மாத்தளை மாவட்டத்திலுள்ள லக்கல, பள்ளேகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த மரக்கடத்தல் வியாபாரத்தை, லக்கல பிரதேச செயலக அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

சுமார் 100 - 200 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டு, வேறு பிரதேசங்களுக்கு அனுப்புவதற்குத் தயாரான நிலையிலேயே, அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வனப் பாதுகாப்புத் திணைக்களம், லக்கல பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், லக்கல பொலிஸார் ஆகியோர் இணைந்து, இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள், லக்கல வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

லக்கல பிரதேச செயலகத்துக்குரிய ரம்புக்கொலுவ, கங்கஹேன்வல, மடுமான, ராவணாகம, கோணவல, கல்கொடவல ஆகிய பிரதேசங்களில், நீண்டகாலமாக, சட்டவிரோதமான இந்த மரக்கடத்தல் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்ததெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை இதுவென்று தெரிவிக்கும் அதிகாரிகள், எனினும், இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லையென்றும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .