2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

மரக்கறிகளை சிவில் பாதுகாப்புப்படை கொள்வனவு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்ய முடியாத நிலையிலுள்ள மரக்கறிகளை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொள்வனவு செய்வதற்கு முன்வந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால், தங்களது உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக, பிரதேச விவசாயிகள், உரிய தரப்பினரிடம் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனீ லொகு போத்தாகமவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அத்தியட்சகர் ரியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைவாக, பலாங்கொடை, இம்புல்பே ஆகிய பகுதிகளில், விவசாயிகளிடமிருந்து,  மரக்கறிகள் உள்ளிட்ட உற்பத்திப் பொருள்களை, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் கொள்வனவு செய்து வருகின்றனர்.
இப்பணியில் கிராம சேவையாளர்கள், விவசாயத் திணைக்கள ஊழியர்கள், விவசாய அமைப்பு க்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .