2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மரக்கிளை தலையில் விழுந்ததில் மாணவி மரணம்

Editorial   / 2023 செப்டெம்பர் 17 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

.ரமேஸ், துவாரக்ஷான்

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை ஒன்று விழுந்ததால் அம்மாணவி உயிரிழந்துள்ளார் என பூண்டுலோய பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா யா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்கரபத்தனை பம்பரகெலே அபகன்லி தோட்டத்தில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அக்கரப்பத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவிதத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X