2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மரத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில், எம்.ஜெயரட்ணம் (வயது 42) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை, சவுக்கு மரத்திலிருந்து தவறிவிழுந்து, நேற்று  மாலை உயிரிழந்துள்ளதாக, அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர், தனது மரக்கறித் தோட்டத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் நோக்கில், மரக்குற்றிகளை வெட்டுவதற்காக, சவுக்கு மரத்தில் ஏறியபோதே, தவறி கீழே விழுந்துள்ளதாக, தெரியவருகிறது.

பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில், அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .