2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொட்டிங்ஹேம் தோட்டத்தில், பெரிய மரமொன்றிலிருந்து, தவறி கீழே விழுந்து ஒருவர், பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

4 பிள்ளைகளின் தந்தையான எம்.கந்தசாமி (வயது 51) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர், தனது வீட்டிற்கு விறகுகளை வெட்டுவதற்கு, பாரிய மரத்தின் உச்சியில் ஏறிய நிலையில், தவறி கீழே விழுந்து, தலையடிபட்டதினால், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், மஸ்கெலியா வைத்தியசாலையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக, கண்டி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என, வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X