2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’மரத்தை வெட்டி அகற்றவும்’

Kogilavani   / 2018 ஜூன் 06 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஒலிபன்ட் தோட்டம், கீழ் பிரிவு வீட்டுத் தொகுதிக்கருகில் உள்ள பாரிய மரமொன்று, சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த மரத்தை வெட்டி அகற்றுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தபோதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழைக் காலம் என்பதால், மரம் முறிந்து வீடுகளின் கூரைகள் மீது விழும் அபாயமுள்ளதாகவும் எனவே, இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை வெட்டி அகற்றுவதற்கு முன்வர வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X