2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் சிறுமி காயம்

ரவிந்திர விராஜ் அபயசிறி   / 2017 மே 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாத்தளை, ரத்தொட்ட பண்டரபொல பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது, மரம் முறிந்து விழுந்ததில், வீட்டிலிருந்த 7 வயது சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாத்தளை அனரத்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்படி பகுதியில், புதன்கிழமை மாலை வீசிய காற்றுக் காரணமாக, வீட்டு வளாகத்திலிருந்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக, அதிகாரிகள் மேலும் கூறினார்.

இச்சம்பவத்தில் வீடு முற்றுமுழுதாக சேதமாகியுள்ளதாகவும் வீட்டிலிருந்தவர்கள் உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .