2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

தென்னை மரம் முறிந்து விழுந்ததில், மூன்று பிள்ளைகளின் தாயொருவர், இரத்தினபுரி நொரகொல்ல பகுதியில், நேற்று  பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில், நிவித்திகல நொரகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த முதியன்சலாகே காந்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண், நொரகொல்ல தோட்டத்திலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .