2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மருமகளின் கன்னத்தை பதம் பார்த்த மாமியார்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்  

பொகவந்தலாவ, கெர்க்ஸ்வேல்ட் மேல்பிரிவு தோட்டத்தில் கர்ப்பிணியான தனது மருமகளின் கன்னத்தை, மாமியார் கடித்து பதம்பார்த்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணி, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியதாகவும் இதன்போது மாமியார் மருமகளின் கன்னத்தை கடித்து காயப்படுத்தியதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில், கர்ப்பிணியை நாய்க்கடித்துவிட்டதாக கூறியே உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், இச்சம்பவம் தொடர்பாக பிரதேசவாசி ஒருவர், பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, பொலிஸார் கர்ப்பிணியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுகொண்டுள்ளனர்.

இதன்போது தன்னை மாமியார் கடித்ததாக அவர், வாக்குமூலமளித்ததால் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை, பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .