Editorial / 2026 மார்ச் 16 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
நோட்டன் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மறை ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கைவசம் வைத்திருந்த இருவரை வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து கைது செய்துள்ளனர்.
நோட்டன், ஒஸ்போன் தோட்டத்தின் 50 ஏக்கர் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதியில் இந்த வேட்டை கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஹட்டன் வனத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் நோட்டன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 52 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்களிடமிருந்து
சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், கைப்பற்றப்பட்ட இறைச்சியைப் பாவனைக்கு உதவாத வகையில் மண்ணெண்ணெய் ஊற்றிப் புதைக்குமாறும் நீதிமன்றம் பணிப்புரை விடுத்தது.
ஹட்டன் வனத்துறை அதிகாரிகளான வி.ஜி. கவிந்துருக்ஷான், ஜி.ஏ. உப்புல், ஜி.டி.பி.கே.ஆர். குணசேகர, நுவன்பெர்ரா மெல் ஆகியோருடன் நோட்டன் பொலிஸ் சார்ஜன் பிரதீப், கான்ஸ்டபிள் பிரிலால் மற்றும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அதிகாரி ஆர்.எம்.பி.பி. ரத்நாயக்க ஆகியோர் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.








4 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
09 May 2026