Editorial / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ்
பொகவந்தலாவ பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள மலசலகூடக் கழிவுநீரானது, கசிந்து பஸ் தரிப்பிடத்துக்கு வருவதாகச் சுட்டிக்காட்டிய பயணிகள் இதனால், பஸ் தரிப்பிடமெங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அம்பகமுவ பிரதேச சபையால், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிடத்திலேயே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தாம் பாரிய சுகாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் பஸ் தரிப்பிடமெங்கும் இளையான்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், பயணிகள் சுட்டிக்காட்டினர்.
எனவே, மலசலகூடத்தின் கழிவுநீர் வெளியேருவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago