Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில், சுமார் 800 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற போதிலும், இப்பாடசாலையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாடசாலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆண் மாணவர்களே கல்வி கற்பதாகவும் இவர்களுக்கான மலசலக்கூட வசதிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆண் மாணவர்களுக்கான மலசலக்கூடத் தொகுதி, 1994ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட போதிலும், அதற்கு பின்னர், இதுவரை எந்தவொரு கழிப்பறையும் புதிதாக நிர்மாணிக்கப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, கடந்த காலங்களில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய தரப்பினர் மலசலக்கூடமொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago